தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து ஞாயிறு அன்று கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு நேற்று திங்கட்கிழமை இரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் இந்த 29 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது அவர்களை
ஜூன் 16 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை படகு பழுது காரணமாக இலங்கை கடற்பரப்புக்குள் வந்ததாக கூறப்படும் மேலும் 4 மீனவர்களை விளக்கமறியலில் வைக்காமல் தடுப்பில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இன்று, புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன்போது, அவர் கச்சதீவு விவகாரம், மீனவர் பிரச்சினை குறித்தும் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று கருதப்படுகிறது.
இந்த சந்திப்பு நிகழவுள்ள நிலையிலேயே, மீனவர்களை விடுவிக்க இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக