வெள்ளி, 6 ஜூன், 2014

ஜெயலலிதாவின் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்தது...!!!

இலங்கை தமிழர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரியுள்ளமையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இந்த நிராகரிப்பை கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் எல்லை சுதந்திரம் என்பவற்றை பாதுகாத்து வருகிறது.

இந்தநிலையில் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் சர்வஜன வாக்கெடுப்பு கொள்கையை ஐக்கிய தேசியக்கட்சி எதிர்த்தாலும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்
என்பதில் உறுதியாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது வெளியாரின் தலையீடுகள் தவிர்க்கப்படவேண்டும் என்றும் எரான் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் போர்க்குற்றம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள்வதற்கு இன்னமும் இலங்கை அரசாங்கத்துக்கு வாய்ப்புள்ளதாக எரான் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக