தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்லவிற்கு இராஜதந்திர பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சு பதவியொன்று ஹுலுகல்லவிற்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது.
ஹுலுகல்ல, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் காமினி திஸநாயக்கவின் இணைப்புச் செயலாளர், இளைஞர் விவகார அமைச்சின் ஆலோசகர், அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக ஹுலுகல்லவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், பல்வேறு சர்ச்சைகளும் எழுந்திருந்தன.
ஹுலுகல்ல, சில தடவைகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்திருந்தார்.
ஜனாதிபதியின் குடும்பத்தாருக்கும், ஹுலுகல்லவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக