திங்கள், 5 மே, 2014

சிரியா ரசாயன ஆயுதங்களை தாமதிக்காமல் அகற்ற வேண்டும்!!!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பதவி விலக கோரி மக்கள் போராடி வருகின்றனர்
அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அதிபர் பஷார் ரசாயன ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதாக ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வந்தன
.
தலைநகர் டமாஸ்கசில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் சிரியா அரசு விஷவாயு தாக்குதலை மேற்கொண்டது.
இதில் ஏராளமான மக்கள் பலியானார்கள்.இதையடுத்து மேற்கத்திய நாடுகள் சிரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன. சிரியா மீது போர் தொடுப்போம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியது. அதன்பின், 1,300 டன் ரசாயன ஆயுதங்களை அழிக்க அதிபர் பஷார் ஒப்புக் கொண்டார்.
அதன்பின் ரசாயன ஆயுதங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டன. எனினும், ரசாயன ஆயுதங்களை அகற்றும் பணியில் தாமதம் ஏற்படுவதை சர்வதேச நாட்டு பார்வையாளர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், சிரியாவில் தற்போது மீதமுள்ள 8 சதவிகித ரசாயன ஆயுதங்களை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்படுத்த கூடாது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேசியிருக்கிறேன். ரசாயன ஆயுதங்களை அழிக்க அதிபர் பஷார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக