நடிகை நயன்தாராவின் இலட்சியத் திரைப்படமான 'நீ எங்கே என் அன்பே' திரைப்படம் மே முதலாம் திகதி வெளியிடப்படவுள்ளது. இதனால், இந்த வருடம் மே முதலாம் திகதி, நயன்தாராவுக்கு மிக முக்கிய நாளாக அமைந்துள்ளது.
இதில் சில முக்கிய கதாபாத்திரங்களில் வைபவ், பசுபதி ஆகியோர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நயன்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தெலுங்கு இயக்குநர் சங்கம் தடை விதித்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கு தடை விதித்து உள்ளதால் டோலிவூட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நயன்தாரா, நடித்த இந்தி கஹானி திரைப்படம் அனாமிகா என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இத்தரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வர நயன்தாரா மறுத்துவிட்டாராம்.
இந்நிகழ்ச்சிக்கு வர பணம் தருவதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டும் கூட விழாவுக்கு வர மறுத்துள்ளார் நயன்தாரா. எனவே நயன்தாரா மீது திரைப்படத்தின் இயக்குநர், தெலுங்கு இயக்குநர் சங்கத்தில் முறைப்பாடு செய்தார்.
இதுபோலவே மகேஷ்பாபு நடித்து ஸ்ரீPனு வைட்லா இயக்கும் ஆகடு திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போது பிரகாஷ்ராஜுக்கும் இணை இயக்குநர் சூர்யாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இணை இயக்குநர் சூர்யாவை பிரகாஷ்ராஜ், வாடா, போடா என்று ஏகவசனத்தில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் தெலுங்கு இயக்குநர் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு முறைப்பாடுகளையும் பரிசீலனை செய்த தெலுங்கு இயக்குநர் சங்கம், இருவரும் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஒரு வருடம் தடை செய்யப்படுவதாக அறிவித்தது.
இதனால் நயன்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ் தரப்பினர் கோபமடைந்துள்ளனர். நயன்தாரா, தற்போது தெலுங்கு திரைப்படவுலகின் நம்பர் வன் நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் பிசியாக இருக்கிறார்.அவர் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவருடன் நடித்து வரும் தெலுங்கு ஹீரோக்கள் கவலை அடைந்துள்ளனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக