வவுனியா வடக்கு வலயப் பாடசாலைகளுக்கு செல்லும் இராணுவத்தினர் அங்கு கடமையாற்றும் ஆசிரியர்களின் விபரங்களைப் பெறுவதுடன் அவர்களைப் புகைப்படமும் எடுப்பதால் பாடசாலைகள் பதற்றத்துடன் இயங்குவதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புலிகள் மீள உருவாக்கம் பெற முயல்வதாக குற்றஞ்சாட்டி வடபகுதியில் சோதனை நடவடிக்கைகளையும் கைது நடவடிக்கைகளையும் தீவிரப் படுத்தியுள்ள இராணுவம் பாடசாலை நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பாடசாலை ஆசிரியர்களை புகைப்படம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு செல்லும் இராணுவத்தினர் அங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்களைப் பெறுவதுடன் அவர்களை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். இந்த சம்பவங்கள் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. இதனால், அச்ச உணர்வுடனே பாடசாலைக்கு செல்லவேண்டியுள்ளதாகவும் மாணவர்களுக்கு இயல்பான முறையில் கற்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சர் கவனம் செலுத்தி பாடசாலையின் இயல்பு நிலைக்கு உதவவேண்டும் என பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது. இதேவேளை, கடந்த வாரம் மன்னார் மாவட்டத்தின் சில பாடசாலைகளிலும் இராணுவத்தினர் இவ்வாறு விபரங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக