வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலும் உள்நாட்டிலும் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சிகளினால் விக்னேஸ்வரனுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பினை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ளவில்லை.
பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பங்கேற்க விக்னேஸ்வரன் விரும்பினார்.
ஜனாதிபதி விக்னேஸ்வரனுக்கு விடுத்த அழைப்பு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் விக்னேஸ்வரனுக்கு நேரடியாக அழுத்தங்களை பிரயோகித்துள்ளனர்.
ஜனாதிபதியுடன் இணைந்து மூன்று பேர் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும் என இந்தியா அறிவித்துள்ளது.
இதில் ஒருவராக விக்னேஸ்வரனை ஜனாதிபதி அழைத்துச் செல்ல தீர்மானித்திருந்தார்.
எனினும், தமிழக அரசியல்வாதிகளைப் போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புலிகள் ஆதரவு தரப்பினரும் ஜனாதிபதியின் அழைப்பினை நிராகரிக்குமாறு கோரியுள்ளனர்.
இதன் காரணமாகவே விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் அழைப்பினை நிராகரித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக