திங்கள், 26 மே, 2014

மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு!!


மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக்காணப்படுவதினால் வீதி நெரிசல்கள் ஏற்படுவதோடு விபத்துக்களும் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார்- மதவாச்சி பிரதான வீதியில் நொச்சிக்குளம்- உயிலங்கும் பிரதான வீதிப்பகுதியிலே அதிகலவான மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக்காணப்படுகின்றது. மாடுகள் மேய்ச்சல் நிலங்களைத்தோடிச்செல்லும் போதும்,பட்டியை நோக்கி வரும் போதும்
குறித்த பிரதான வீதிகளில் நீண்ட நேரம் போக்குவரத்து தடையுடம்,நெரிசல்களும் ஏற்படுகின்றது.


நூற்றுக்கனக்கான மாடுகள் வீதியை கடக்க முற்படுகின்றது.இதனால் குறித்த வீதியில் விபத்துக்களும் ஏற்படுகின்றது.


மாட்டு உரிமையாளர்கள் கவனம் செலுத்தாத நிலையில் அசமந்தப்போக்குடன் நடந்து கொள்ளுவதாக வாகான உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர்.

எனவே உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளும் பொலிஸாரும் இவ்விடையத்தில் அக்கரை செலுத்தி மக்கள் சுதந்திரமான முறையில் போக்கு வரத்துச் செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்தி தருமாறும்,தொடர்ந்தும் அசமந்தப்போக்குடன் செயற்பாடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்ககைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக