பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு யசோதா பென் என்ற பெண்னுடன் இளம் வயதில் திருமணம் நடந்தது. பின்னர் சேர்ந்து வாழாமல் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மோடி வேட்பு மனுதாக்கலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி பெயர் யசோதா பென் என்று முதன்முதலாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து அவரை கண்டறிந்த ஊடகங்கள், தொடக்க பள்ளி ஆசிரியையாக இருந்தவர் என்றும், கிராமத்தில் வசித்துவருவதாகவும் செய்திகள் வெளியிட்டடன. மோடி குறித்து யசோதா பென் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அவர் நாட்டின் பிரதமராக
பதவி ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒட்டுமொத்த தேசத்தைவிட அதிகமாக மகிழ்கிறேன். நானும் அவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. நாங்கள் சேர்ந்து வாழவில்லை அவ்வளவுதான்.
அவரைப் பொறுத்தமட்டில், அவரது வாழ்க்கையில் நாடுதான் மிகவும் முக்கியம். அவர் அழைத்தால் அவருடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக