சனி, 24 மே, 2014

வடக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி.....!!!!!

வடக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவிகைள வழங்கி வருவதாக அரசுக்கு ஆதரவான திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில பல்கலைக்கழக மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாநது ஆகிய நாடுகளிலிருந்து பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


கனடா, நோர்வே, சுவிட்சர்லாந்து, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு விஜயங்களை செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு புலம்பெயர் தமிழர்களே உதவிகளை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு பணம் பெற்றுக் கொண்ட ஓர் அரசியல்வாதி தற்போது லண்டனுக்கு விஜயம் செய்துள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக