திங்கள், 5 மே, 2014

யாழ். போதனா வைத்தியசாலை இதய சிகிச்சைப் பிரிவில் சி.வி.விக்னேஸ்வரன்!!!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04.05.14) அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.  யாழ் போதனா வைத்தியசாலையின் இதயச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காகவே முதலமைச்சர்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதயச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர், 'கோல்டர்' பரிசோதனை என்னும் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார் எனவும் வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக