சனி, 24 மே, 2014

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இடைநிறுத்தம்...!!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு ஊடகவியல் தொடர்பாக நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் பொலிஸாரால்  வெள்ளிக்கிழமை தடுத்துநிறுத்தப்பட்டது.

இன்ரநஷனல் டிரான்பரன்ஸி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச் செயலமர்வு பொலநறுவ கிரியந்தல என்றும் இடத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
நேற்று இரவு செயலமர்வினை ஏற்பாடு செய்த நிறுவத்திற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தாம் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தியவர்கள் குறித்த செயலமர்வினை கைவிடுமாறு தெரிவித்துள்ளனர். அதனையும் மீறி இன்று காலை செயலமர்வை ஆரம்பித்த போது, விடுதி முகாமைத்துவத்திற்கு
தொடர்ந்து செயலர்வை நடத்த அனுமதிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.
 இதையடுத்து செயலமர்வு இடைநிறுத்தப்பட்டது. இதில் பங்கேற்க சென்ற ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பபட்டனர்
. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறாததாலேயே இச்செயலமர்வு இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்செயலமர்வுக்கு வடக்கு மாகாணத்தை சேர்ந்த 8 ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 7 ஊடகவியலாளர்களும் சென்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக