முறிகண்டிப் பகுதியில் ரயில் மோதி ஒரு உயிரிழந்தார் இச்சம்வம் நேற்று இரவு இடம்பெற்றது. நேற்று இரவு பளையிலிருந்து கொழும்பு சென்ற ரயில் முறிகண்டிப் பகுதியில் ஒருவரை மோதித்தள்ளியது. அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். முகப் பகுதி சிதைவடைந்த நிலையில் இருப்பதால் இறந்தவரை உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக