சனி, 17 மே, 2014

யுத்த வெற்றியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாத்தறையிலும் கொழும்பிலும் வெற்றிவிழா......!!!!!!!

யுத்த வெற்றியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றிவிழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாளையும் நாளை மறுதினமும் கோலாகலமாக நடைபெறுகின்றன.

யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் நாளை காலை 8.00 மணிக்கு மாத்தறை நகரிலும், தேசிய படைவீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் நாளை மறுதினம் மாலை 4.00 மணிக்கு கொழும்பில் பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு
தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் டி. எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன், சிவில் பாதுகாப்புப் படைப்பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதுதவிர, அமைச்சர்கள். பிரதி அமைச்சர்கள். மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள், தூது வர்கள், தூதரகப் பாதுகாப்பு அதிகாரிகள், மதத் தலைவர்கள், அரச மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக