2020 ஆம் ஆண்டில் 50 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி வாய்ப்பு!!
2020 ம் ஆண்டிற்குள் இலங்கையில் 10 தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்து, அவற்றின் மூலம் சுமார் 50 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க சந்தர்ப்பத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட உள்ளதுடன், இந்தியாவின் மணிபால் பல்கலைக்கழகம், சிங்கப்பூரின் ரெப்பல்ஸ் பல்கலைக்கழகம் உட்பட பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் தமது கிளைகளை இலங்கையில்
நிறுவ அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
நிறுவ அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் பல்கலைக்கழகம் ஒன்றின் கிளையை இலங்கையில் நிறுவுவதற்கான அனுமதியை நாடாளுமன்றம் கடந்த வருடம் வழங்கியது.
இந்த பல்கலைக்கழகத்தில் 4000 முதல் 6000 மாணவர்களுக்கு அனுமதியை வழங்க முடியும் எனவும், இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பயில்வதால் செலவாகும் அந்நிய செலாவணியை இதன் மூலம் மீதப்படுத்த முடியும் எனவும் அரசாங்கம் எண்ணியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக