ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையொட்டிய நிகழ்வுகள்..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையொட்டியும், இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டும் நாடுமுழுவதும் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாளை 15ம் திகதி தேசத்துக்கு நிழல்தரும் 11லட்சம் மரக்கன்றுகள் நாட்டப்படுகின்றன. காலை 10:07 முதல் 10:18 வரை யிலான 11 நிமிடங்களுக்குள்ளான சுபவேளையில் இந்தக் கன்றுகள் நாட்டப்படும். மத வழிபாட்டுத் தலங்களிலும் ஜனாதிபதி செயலகம் முதல் சகல அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் ஆகியன மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்கின்றன. தவிரவும் சகல வீட்டுத் தோட்டங்களிலும் மரக்கன்றொன்றை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசத்திற்கு நிழல்தரும் மரம் நடுகை திட்டத்தின்கீழ் நாட்டப்படும் கன்றுகளைப் பராமரிப்பதற்கான திட்டமொன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டுக்கு மதிப்பைத் தேடித்தந்த உண்மையான தேசிய தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் செலுத்தும் மரியாதையாக மரக்கன்று நாட்டும் திட்டம் மேற் கொள்ளப்படுவதாக சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக