ஞாயிறு, 14 நவம்பர், 2010

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பிரதான பாதைகள் 302 மில்லியன் அமெரிக்க டொலர்செலவில் புனரமைப்பு..!

வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான பிரதான பாதைகள் 302 மில்லியன் அமெரிக்க டொலர்செலவில் புனரமைக்கப்படவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதான பாதைகளும், யாழ். மாவட்டத்தில் நான்கு பிரதான பாதைகளும் இலங்கை நாணயப்படி 30,000 மில்லியன் ரூபா செலவில் சீன அரசின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றத்துக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ வீதி புன ரமைப்பு வேலைகளை நேற்று ஆரம்பித்து வைத்துள்ளார். நேற்றுக்காலை முல்லைத்தீவு - மாங்குளம் பாதை, புனரமைப்பு வேலைக்களுக்கான அடிக்கல்லை நட்டு வைத்துள்ளார். நேற்றுப்பகல் ஒட்டுச்சுட்டான் நெடுங்கேணி பாதைக்கான அடிக்கல் நிகழ்வும் நடைபெற்றது. மாலை கிளிநொச்சி கனகராயன்குளத்தில் யாழ். -வவுனியா ஏ-9 பாதைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றது. முல்லைத்தீவு - மாங்குளம் வீதி, முல்லைத்தீவு - புல்மோட்டை ஊடான கொக்கிளாய் வீதி, முல்லைத்தீவு - நெடுங்கேணி ஊடான புளியங்குளம் வீதி போன்ற பிரதான வீதிகள் கார்பட் போடப்பட்டு புனரமைப்பு செய்யப்படவுள்ளன. வீதி அபிவிருத்தி வேலைகளை சீன ரெயில்வே பொறியியல் மும்பெளி லிமிட், சீன ஏறோ ரெக்னோலஜி இன்ரநஷனல் என்ஜினியரிங் ஓப்பரேஷன், சிரோ ஹைட்ரோ கோப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள் நிறைவேற்றவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த சீன அரசாங்கமும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் முன்வந்துள்ளன. வட பகுதியின் வரலாற்றில் ஆகக் கூடிய நிதி வீதி அபிவிருத்திக்கு முதல் முறையாக அமுல் செய்யப்படவுள்ளது. இவ்வேலைகள் 30 மாதங்களில் பூர்த்தியாகுமென திட்டப் பணிகளுக்கு பொறுப்பான யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதி கார சபை பிரதம பொறியியலாளர் வி. சுதாகர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில், யாழ்ப்பாணம் கண்டி வீதியில் 253 கிலோமீற்றர் வீதியும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் 83 கிலோமீற்றர் வீதியும், யாழ்ப்பாணம் பலாலியில் 60 கிலோமீற்றர் வீதியும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் புத்தூர் சந்தி வரையான 30 கிலோமீற்றர் வீதியும், புத்தூர் மீசாலை இருபது கிலோமீற்றர் வீதியும் முப்பத்திமூன்றடிக்கு அகலமாக்கப்பட்டு காப்பற் வீதியாக மாற்றப்படவுள்ளன. வீதிகளை அகலமாக்கும் எல்லைகளை வீதி அபிவிருத்திச்சபை நடுகைக்கற்கள் மூலம் அடையாளப்படுதியுள்ளது. இதேவேளையில், பிராந் திய வீதிகளான மானிப்பாய் - காரைநகர் வீதி, சுண்டுக்குளி, கொழும்புத்துறை வீதி, கச்சேரி கடற்கரை துறைமுகவீதி, நல்லூர் ஓட்டுமடம்வீதி, யாழ். பொன்னாலை பருத்தித்துறைவீதி, யாழ் பண்ணை ஊர்காவற்றுறை வீதி, சங்கிலித்தோப்பு, செம்மணி வீதி, நாவாந்துறை ஓட்டுமடம் வீதி என்பனவும் அபிவிருத்தி செய்யப் படவுள்ளன. 18 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி வேலைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் அமைச்சின் செயலா ளர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, நெடுஞ் சாலை அமைச்சின் பணிப்பாளர்நாயகம் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி, மேலதிகப் பணிப்பாளர் டபிள்யூ. எஸ். வீரசிங்க ஆகியோரின் வழிநடத்தலில் ஆரம்பமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக