புதன், 22 செப்டம்பர், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் 130 பேர் ஐ.நாவுக்குச் சென்றுள்ளனர்..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் 130 பேர் ஐ.நாவுக்குச் சென்றுள்ளனர் என் றும் அவர்களின் செலவுக்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து 14 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் ஐ.தே.க. எம்.பி. திஸ்ஸ அத்தநாயக்க நேற்றுக் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் தன்னுடன் ஒரு பட்டாளத்தையே அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அந்தப் பட்டாளத்துக்குச் செலவுசெய்த பணத்துக்கு ஈடான தொகையைக்கூட அந்நாடுகளிடமிருந்து இலங்கை அரசு உதவியாகப் பெறுவதில்லை. மக்களின் பணம் இவ்வாறு வீணடிக்கப்படுவதுதான் மீதம். இப்போது கூட ஐ.நா. சென்றிருக்கும் ஜனாதிபதி தன்னுடன் 130 பேரை அழைத்துச் சென்றுள்ளார். இவர்களுக்காக மக்களின் பணத்தில் இருந்து 14 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால், ஐ.நாவின் கூட்டத்தில் 4 அல்லது 5 பேர்தான் இலங்கை சார்பாக கலந்துகொள்ள முடியும். அப்படி இருக்கும்போது ஏன் ஒரு பட்டாளத்தை அழைத்துச் செல்லவேண்டும். பாணின் விலையை 3 ரூபாவால் அதிகரித்து மக்கள் மீது சுமையேற்றி அரசு கோடிக்கணக்கான ரூபாவை இவ்வாறு வீண் விரயம் செய்கிறது. இவ்வாறான வீண் விரயத்தை ஏற்க முடியாது. இதுதான் கடுமையாக எதிர்க்கின்றோம். வீண்விரயத்தை உடன் நிறுத்துமாறு நாம் அரசிடம் கோருகின்றோம். என்றார். இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக