திங்கள், 17 மே, 2010
தீர்வுத்திட்டமின்றி அமைக்கப்படும் செனட் சபை அர்த்தமற்றது - ஜ.தே.கட்சி தெரிவிப்பு
வடக்கு கிழக்க பிரச்சனை தொடர்பில் தீர்வுத்திட்டம் ஒன்றை கொண்டுவராமல் முதலில் செனட் சபையை கொண்டுவருவதையே ஐக்கிய தேசிய முன்னணி விரும்புகிறது என்று முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் அரசியலமைப்பு திருத்தங்களின்போது செனட் சபை ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அனைத்து மாகாண சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தம் செனட் சபை அமையும் என்றம் அரசாங்கம் தெரிவித்துவருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் மற்றம் செனட் சபை உள்ளிட்ட விடயங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறது நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களை நாங்கள் எதிர்க்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம் முக்கியமாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் தீர்வுத்திட்டத்தை முதலில் கொண்டுவராமல் செனட் சபையை அமைப்பது அர்த்தமற்றது என்றே நாங்கள் கருதுகிறோம் அரசியல் தீர்வுத்திட்டத்துடன் செனட் அமைக்கப்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்ளலாம் செனட் சபை என்பது சிறந்த விடயம் என்பதனை நாங்கள் ஏற்கிறோம் ஆனால் அது தீர்வுத்திட்டத்துடன் வரவேண்டிய விடயமாகும் அவ்வாறு சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் செல்லுமாயின் அதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று அவசியமாகும் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக