ஞாயிறு, 16 மே, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களை சந்திக்கவுள்ளனர்..!!
வன்னியில் மீளக்குடியமர்த்த மற்றும் நலன்புரி நிரலயங்களில் தங்கியுள்ளவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓர் அணியாக சென்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் எதிர்வரும் 21ம் திகதி முதல் 24ம் திகதிவரை வன்னியில் தங்கியிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்கள் மற்றும் மீள்குடியமர்ந்துள்ள இடங்களுக்கும் நேரில் செல்வர் எதிர்வரும் 21ம் திகதி காலை 7.00மணிக்கு வவுனியாவில் ஒன்று கூடும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையில் சென்று கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துள்ளவர்களை சந்தித்து அவர்களின் வசதிகள் தேவைகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களையும் கூட்டமைப்பு எம்பிக்கள் சந்தித்து அவர்களின் நிலைமைகள் குறித்தும் கேட்டறியவுள்ளனர் கடந்த வருடம் வன்னியிலுருந்து இடம்பெயர்ந்து மக்கள் வவுனியா நிவாரண முகாம்களில் தங்கியிருந்தபோது தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அவர்களை சந்திக்க அரசு அனுமதி மறுத்து இருந்தது சுட்டிக்காட்டதக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக