திங்கள், 1 மார்ச், 2010

தேர்தல் சட்டங்களை மீறும் ஊடகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை..!

தேர்தல் சட்டங்களை மீறிச்செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார் தேர்தல் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 21அம்சவிதிகளை பின்பற்றத்தவறும் ஊடகங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றினால் வழக்கு தொடரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தொடர்பிலான விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களை நடத்த சகல ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார் விதிகளை மீறிச்செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றில் வழக்குத்தொடரவேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் சகல ஊடகங்களும் தேர்தல் செயலகத்தின் உத்தரவுகளை ஏற்றுச் செயற்படவேண்டும் எனவும் குறிப்பாக அரசாங்க ஊடகங்கள் இந்த விதிகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் இதுபோன்றதொரு ஊடக ஒழுங்குவிதிக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது செய்தி அறிக்கையிடல் நேர ஒதுக்கம், நிகழ்ச்சிகள் என பல்வேறு விடயங்கள் பற்றி தேர்தல் செயலகம் விதிகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக