சனி, 27 பிப்ரவரி, 2010

வன்னியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத்தேர்தலில் அதிகூடிய ஆசனங்களை பெறுகின்ற கட்சியாக திகழப்போகின்றது-அமைச்சர் ரிசாத் பதியுதீன்..!

மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு அமோகவெற்றி பெற்றாரோ அதேபோல வன்னியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத்தேர்தலில் அதிகூடிய ஆசனங்களை பெறுகின்ற கட்சியாக திகழப்போகின்றது என வன்னி மாவட்ட பொதுசன ஐக்கிய முன்னணி முதன்மை வேட்பாளர் றிசாட் பதிவூதீன் தெரிவித்துள்ளார். மூவினத்தையும் சேர்ந்தவர்கள் எம்மை ஆதரிக்க முன்வந்துள்ளார்கள் எங்களுடைய வேட்புமனுவில் முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி எம்பி இருவர் இடம்பெற்றுள்ளனர் எனவும் கூறியுள்ளார். வேட்புமனுவை தாக்கல்செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ரிசாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 30 வருடகால போரினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுடைய மக்கள் பிரதேசம் மீண்டும் கட்டி எழுப்புவதற்கு வெற்றிபெற்றுள்ள ஜனாதிபதி; இன்னமும் எட்டு வருடம் ஆட்சியில் இருக்கபோகின்றார் அவருடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அபிவிருத்தியை காணலாம்; என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. மக்கள் எம்முடன் கைகோர்த்து நிற்கவேண்டும். ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி வன்னி மாவட்டத்தில் மூன்றுக்கு குறையாத ஆசனங்களை பெறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட தலைவர்களின் ஒருவரான கருணாஅம்மான் கூட ஜனநாயக வழிக்குவந்து எங்களுடைய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியை பெற்று அழிந்து போயிருந்த கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முன்வந்துள்ளார் கடந்த 30வருட போருக்கு தமிழ்சமூகத்தை மாத்திரம் குறைகூறமுடியாது சகல தரப்பிலும் பிழைகள் நடந்துள்ளது. எங்களுடைய ஜனாதிபதிமீது தமிழ்மக்களுக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. அதனால்தான் கூட்டமைப்பு முன்னாள் எம்பிகள் சிவநாதன் கிசோர், கனகரத்தினம் இந்த தேர்தலில் எங்களுடன் இணைந்து இப்பிரதேச சமூகத்திற்கும் வன்னி மாவட்டத்திற்கும் சேவைசெய்ய தேர்தல் களத்தில் இணைந்துள்ளனர். சகல இனமக்களையும் அரவணைத்து செல்கின்ற எங்களுடைய அதிமேதகு ஜனாதிபதியாக இருக்கின்றார். அவரது கரங்களை பொதுத்தேர்தலில் நாம் பலப்படுத்த வேண்டும என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும்தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக