வெள்ளி, 1 ஜனவரி, 2010
பம்பலப்பிட்டிய கடற்பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமாயிருந்த பொலீஸ் அதிகாரி மரணம்..!!
கொழும்பு பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்தை அண்டிய கடற்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மத்தியில் வைத்து தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கிய நிலையில் அவர் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமாயிருந்த பொலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த பொலீஸ் அதிகாரி பிரதான சந்தேகநபராக காணப்பட்டு கைதுசெய்யப்பட்டு கொழும்பு மகசின்சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இவர் சுகயீனமடைந்து இன்றுமுற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவர் மாரடைப்பினால் மரணித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக