வெள்ளி, 1 ஜனவரி, 2010

நந்திக்கடல் மற்றும் சிவந்தபுரம் பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் மீட்பு..!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவந்தபுரம் மற்றும் நந்திக்கடல் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீனரக ஆயுதங்கள் பலவற்றை விசேட பொலீஸ் பிரிவினர் மீட்டுள்ளனர். நேற்று முன்தினம் மீட்கப்பட்ட குறித்த ஆயுதங்களில் ஸ்னைப்பரில் பொருத்தும் இரு ஆயுதங்களும், 75கிலோ கிராம் நிறையுடைய வெடிபொருட்களும் அடங்குவதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சி4 ரக 35கிலோ வெடிபொருள், ரீ.என்.ரீ ரக வெடிபொருள்; 15கிலோ, 10கிலோ கிறாம் எடைகொண்ட 15 குண்டுகள், டெட்டனேட்டர் 21 என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக