வெள்ளி, 1 ஜனவரி, 2010

அரச உயரதிகாரிக்கு அசௌகரியம், சோதனைச் சாவடிகள் நீக்கம்..!!

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்வதற்காக கடந்த 21ம் திகதிமுதல் கொழும்பு கோட்டை ஜயவர்த்தனபுர வீதியில் அமைக்கப்பட்டு இயங்கிவந்த இரு பொலீஸ் வீதிச் சோதனைச் சாவடிகள் கடந்த 27ம் திகதி திடீரென அகற்றப்பட்டுள்ளன. இவ்விரு சோதனை நிலையங்களிலும் கடமை புரிந்த 40 பொலீசார் அவர்கள் முன்பு பணிபுரிந்த இடங்களுக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வழியாகப் பிரயாணம் செய்த அரசாங்கத்தின் மிகவும் உயர் அதிகாரியொருவின் உத்தியோகபூர்வ வாகனத்தை குறித்த இடங்களில் நிறுத்திய பொலீசார் அந்த அதிகாரியின் அடையாள அட்டையை பரிசோதித்ததாகவும் பின்னர் அவர் அரச உயரதிகாரியென்று தெரிந்து கொண்டதும் உடனடியாக பயணத்தை தொடர அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சம்பவம் நடந்த ஒருமணி நேரத்தில் இரு சோதனை நிலயைங்களையும் உடன் அகற்றுமாறு பொலீஸ் மாஅதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் நாட்டில் பல இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அகற்றப்படுவது போல் தான் இந்த நிலையங்களும் அகற்றப்பட்டுள்ளதென பொலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக