சனி, 2 ஜனவரி, 2010

மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக சாந்தினிதேவி சந்திரசேகரன் நியமனம்..!!

மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக மறைந்த அதன் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் மனைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழுவின் இன்று கூடியவேளையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரனின் பூதவுடல் தற்போது ராஜகிரியவிலுள்ள அமைச்சின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பூதவுடல் நாளைமுற்பகல் 11மணிமுதல் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளை நண்பகல் அன்னாரின் பூதவுடல் தலவாக்கலை இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. சந்திரசேகரன் அவர்களின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 04ம்திகதி திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் தலவாக்கலை பொது விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக