வியாழன், 14 ஜனவரி, 2010

எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் 1000விடுதலைப்புலி உறுப்பினர்கள் குடும்பங்களுடன் இணைக்கப்படவுள்ளனர்...!!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் சுமார் 1000விடுதலைப்பலி உறுப்பினர்கள் குடும்பங்களுடன் இணைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பல்வேறு பிரதேசங்களில் தங்கியிருந்த இந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் நீதி மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் மேலும் பல விடுதலைப்புலி சந்தேகநபர்களை விடுதலை செய்ய முடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையில் 805 விடுதலைப்புலி சந்தேகநபர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக