சனி, 26 டிசம்பர், 2009

புளொட், ஈபிஆர்எல்எப் உட்பட தமிழ் தலைவர்கள் இந்தியத் தூதுவர் மற்றும் அதிகாரிகளுடன் மன்னார் விஜயம்.. (புகைப்படங்கள் இணைப்பு)

இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா உள்ளிட்ட தூதுக்குழுவினரும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் வவுனியா, மன்னாருக்கு விஜயம்- இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா நேற்று முன்தினம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்தியத் தூதுவருடன், பிரதித் தூதுவர் சிறீ விக்ரம் மிர்ஷி, தூதரக அரசியல்செயலர் சியாம் மற்றும் தூதரகத்தின் இராணுவஅதிகாரி ஆகியோரும் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர். மேற்படி தூதுக்குழுவினர் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களைப் பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கும் விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்ட செயலகத்தில் கச்சேரியில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் மற்றும் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பிலான புகைப்படங்கள் சில இங்கு தரப்படுகின்றன. (புகைப்பட உதவி.. புளொட் ஊடகப்பிரிவு -வவுனியா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக