சனி, 26 டிசம்பர், 2009
இலங்கைக்கு சீனா 1840கோடி ருபாய் நிதியுதவி !!
இலங்கைக்கு சீனா 1840கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் சீனாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர் அங்கு சீன வர்த்தகப் பிரதியமைச்சர் சென் ஜியானை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தக் கலந்துரையாடலையடுத்தே இந்நிதியுதவியை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை உயர்மட்டக் குழுவினர் சீனாவின் வர்த்தகப் பிரதியமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். இதன்போது இலங்கை எதிர்பார்க்கும் சகல உதவிகளையும் தாம் மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாக சீனாவின் வர்த்தகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக