ஞாயிறு, 27 டிசம்பர், 2009

இறுதிக்கட்ட போரின்போது புலித்தலைவர்களை வெளியேற்ற அமெரிக்கா முயன்றது..!!

இறுதிக்கட்டப்போருக்கு இருமாதங்களுக்கு முன்னர் வன்னியில் போர்களத்தில் இருந்த விடுதலைப்பலிகளின் முக்கிய தலைவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக அங்கியிருந்து வெளியேற்ற அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக த ஐலண்ட் பத்திரிகையின் முகப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை இராணுவம் முன்னேறிக் கொண்டிருப்பதை இனியும் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்த முடியாதென்பதை நோர்வே ஏற்றுக் கொண்ட பின்னர் இந்த முயற்சிகளை இலங்கைக்கான அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களை வெளியேற்ற இன்னும் சந்தர்ப்பம் உள்ளதாக மார்ச் மாதத்தில் அமெரிக்கா வலியுறுத்தியதற்கு முக்கிய காரணம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடற்படைத்தளபதி சூசை, புலனாய்வுத்துறை தளபதி பொட்டுஅம்மான் அவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட சுமார் 100பேரைப் பாதுகாப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வந்ததாக அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. இவ்வாறு தலைவர்களை வெளியேற்றும் திட்டம் குறித்து கலந்தாலோசிக்க பிளேக் அமெரிக்க வல்லுநர்களை கொழும்புக்கு அழைக்க இருந்ததாகவும் தலைவரை மீட்பதற்கு அமெரிக்கா கலங்களை பயன்படுத்துவது குறித்தும் அவர் ஆலோசித்தார் என்றும் அச்செய்தி கூறுவதோடு ஆனால் இந்தியாவின் ஆலோசனையின்றி இவ்வாறு புலித்தலைவர்களை மீட்பதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிற்கு இரகசியமாக அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலித்தலைவர்களை மீட்கும் நோக்கில் ஹவாய் நாட்டிலிருந்து வந்த விமானம் ஒன்று தரையிறக்குவது குறித்த முறையான செயல்களை செய்வதில் முரண்பட்டு பின்னர் தரையிறக்கப்பட்டதாம் மேலும் இந்த விமானம் இலங்கை வருவது குறித்த தகவலானது அது ஏற்கனவே வானில் பறக்கத் தொடங்கிய பின்னரே அறிவிக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் மிக நுட்பமான முறையில் அணுகுமுறை ஒன்றை பின்பற்றியே இந்த முயற்சிகள் முறியடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது இந்த இரகசிய முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இராணுவம் மெல்ல மெல்ல புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவி 45சதுர கிலோ மீற்றரை மட்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு மிகுதி அனைத்தையும் இராணுவம் கைப்பற்றி வி;ட்டதாக அப்பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக