வெள்ளி, 18 செப்டம்பர், 2009

அகிம்சையின் வழிகாட்டி ஆசானாக எங்கள் “நாபா” தோழர் (கவிதை)


அன்பினால் அரவணைத்த எங்கள் தோழர்
அமைதி வடிவத்தை தந்த எங்கள் தோழர்
அத்தியாயமாக அரசியல் தந்த எங்கள் தோழர்
அப்பழுக்கில்லாத தோழன் எங்கள் தோழர்
சுயநலத்ததை சுட்டெரித்த எங்கள் தோழர்
சுகங்களை துறந்த எங்கள் தோழர்
சுகமாக மக்களை அணைத்த எங்கள் தோழர்
சுமைகளை சுமந்த எங்கள் தோழர்
கல்மனது இல்லதா எங்கள் தோழர்
கவரிமான் குணமுடைய எங்கள் தோழர்
கருந்தாடி அமைந்த எங்கள் தோழர்
காவியங்கள் பல படைத்த எங்கள் தோழர்
கர்மவீர்களின் தலைவன் எங்கள் தோழர்…

நல் ஆசான் எங்கள் தோழர்
நல் வார்த்தைகளை விதைத்த எங்கள் தோழர்
நல்வழிகாட்டிக் கல்லாக எங்கள் தோழர்
நயவஞ்சகமறியா எங்கள் தோழர்
நல்மதிப்பு பெற்ற எங்கள் தோழர்

இறமை என்னவென்று அறிந்த எங்கள் தோழர்
இமைகளை என்று மே மூடாத எங்கள் தோழர்
இறுமாப்பு இல்லாத எங்கள் தோழர்
இன்பங்களை துறந்த எங்கள் தோழர்

தீமைகள் செய்தவரை மன்னித்த எங்கள் தோழர்
திருந்திவா என்று கூறிய எங்கள் தோழர்
தினம் தினமும் காத்து நின்ற எங்கள் தோழர்
திறன் படைத்த கரங்களை முத்தமிட்ட எங்கள் தோழர்

எதிரிகள் உனை எதிர்க்காத எங்கள் தோழர்
எதிர்நீச்சல் போடுவதில் வீரன் எங்கள் தோழர்
என் எனது அறிய எங்கள் தோழன்
எதார்த்தம் நியைவே நிறைந்த எங்கள் தோழர்

இத்தனைக்கும் ஓரே வடிவம் எங்கள் தோழன்
இயல்பாக கூறமுனைந்தால் அவரே எங்கள் பத்மநாபா தோழர்

கிளியின் ஓர்கிராமத்து நாயகன்.. வவிதரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக