வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களை உறவினர்கள் பொறுப்பேற்பதற்கான விண்ணப்பங்களை ஏற்குமாறு கோரி வவுனியா செயலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களைப் பொறுப்பேற்க விரும்புபவர்கள் அதற்கென மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்டுள்ள விண்ணப்பப் படிவங்களில் விபரங்களைத் தெரிவித்து வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்குமாறு ஊடக விளம்பரத்தின் மூலம், மீள்குடியேற்ற அமைச்சு கோரியிருந்தது. இதற்கமைய வவுனியாவில் உள்ள பலர் இதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வவுனியா செயலகத்தில் கையளித்து வந்தார்கள். கடந்த புதன்கிழமை முதல் இந்த விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கான அறிவித்தல் பிரதேச செயலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் முகாம்களில் உள்ளவர்களைப் பொறுப்பேற்பதற்கு விரும்பிய பலர் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து, இவ்வாறு ஏமாற்றமடைந்த பலர் நேற்று வவுனியா செயலகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வவுனியா அரசாங்க அதிபரைச் சந்திக்க வேண்டும் எனக் கோரிய போதிலும், அவ்வாறான சந்திப்பு இடம்பெறவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக