சனி, 19 செப்டம்பர், 2009

கொழும்பு அரசியல் சிறைக்கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்

சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாக கொழும்பு தடுப்புக் காவல் சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் கைதிகள் சுமார் 250 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். தம்மை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் அல்லது புலிகள் இயக்கத்தில் மிக முக்கிய பதவிகளில் இருந்த தயா மாஸ்டர், ஜோர்ஜ் ஆகியோரை விடுவித்தது போல பிணை அடிப்படையிலாவது விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே தாம் உண்ணாவிரதப் போராட் டத்தில் குதித்துள்ளனர் என்று கைதிகள் கூறினர். சட்ட மா அதிபர், திணைக்கள சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை சட்டத் தரணிகள் வழங்கிய உறுதிமொழிகளின் பிரகாரமே ஏற்கனவே நடத்திய போராட்டங்களைத் தாம் கைவிட்டனர் என்றும், ஆனா லும் தமது விடுதலைக்கான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் கைதிகள் தெரிவிக்கின்றனர். நாடு முழுதும் கிட்டத்தட்ட 1600 பேர் கைது செய்யப்பட்டு பல சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமது கோரிக்கையை ஜனாதிபதி செவிமடுப்பார் என நம்புவதாகவும் மேலும் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக