ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

10ஆயிரம் பயிற்சிபெற்ற புலி உறுப்பினர்களின் விபரம் அடங்கிய ஆவணங்கள் குடும்பிமலையில் மீட்பு

புலிகள் இயக்கத்தில் பயிற்சிபெற்ற 10ஆயிரம் பேரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணக் கோவையொன்றினை மட்டக்களப்பு, குடும்பிமலை நரகமுல்லைப் பிரதேசத்திலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விபரங்கள், புலிகள் வங்கிகளின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருதொகை பற்றுச்சீட்டுக்கள், தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளிலான சஞ்சிகைகள், புலிகள் இயக்கம் கொழும்பு வர்த்தகர்களுடன் கொண்டுள்ள கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான 05ஆவணங்கள் என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக