வியாழன், 14 மே, 2015

குமுதினியில் பயனித்து பலியாக்கப்பட்டவர்களுக்காக ஒர் நிமிடம் தியானிப்போம்.!!

எம் இனத்தவர் வரலாற்றில் படுகொலைகள் என்பதும் ஒர் அத்தியாயம் ஆக்கப்பட்டுள்ளது. இவ் நிகழ்வுகள் இந்த நாடு சுதந்திரம் பெற்றதாக கூறப்படும் காலம் முதலாகவே இடம் பெற்று வந்ததனை வரலாறுகள் காட்டி நிற்கின்றது.
இன்றைய இவ் நாள் கோரமாக கொல்லப்பட்ட குமுதின்ப்பபடுகொலையின் மூன்றாவது தசாப்த நாள் ஆகும். எம் உறவுகள் அலைகள் மத்தியிலே அழிக்கப்பட்ட நாள். பாதகம் அறியாத பச்சிளம் குழந்தை முதலாக 36 தழிழ் உயிர்கள் பறிக்கப்பட்ட நாள். இவ் நாளில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்காக ஒவ்வொரு தழிழ் உறவுகளும் ஒர் நிமிடம் அஞ்சலி செலுத்தி தியானிப்போம்.

திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்,
தவிசாளர்,

வலி மேற்கு பிரதேச சபை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக