ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

கொழும்பில் கோத்தாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி முஜிபுர் ரஹ்மான்...!!

கொழும்பு வாழ் மக்களுக்கு இனி மேல் கோத்தபாய ராஜபக்சவினுடைய ஆதிக்கம் கிடையாது என மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் கொழும்பு வாழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் யுகத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.

தெமட்டகொடை பொதுச் சந்தை கட்டட தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு வாழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு குரல் கொடுத்து வந்துள்ளோம்.


மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது கொழும்பு வாழ் மக்கள் பல இன்னல்களுக்கு முகங் கொடுத்தனர்.

வீடுகள் உடைக்கப்பட்டன. பலவந்தமாக காணிகள் பறிக்கப்பட்டன.

இது தொடர்பில் பல தடவைகள் நீதிமன்ற வாசலில் வீற்றிருந்தோம்.

எனினும் ராஜபக்ஷ குடும்ப ஆட்சியில் கொழும்பு வாழ் மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர்.

 இந்தநிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியானது நாடளாவிய ரீதியில் தோல்வி காணும் போது கொழும்பு மாநகரில் ஐ. தே. க. வாக்கு வங்கியை எம்மால் பாதுகாக்க முடிந்தது.

எனவே கொழும்பு வாழ் மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி நன்றிக்கடன் பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு நகரில் மக்களின் வாழ்க்கையில் இனிமேல் கோத்தபாய ராஜபக்சவின் ஆதிக்கம் இருக்காது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக