சனி, 20 டிசம்பர், 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில்..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில் அறிவிக்கப்படும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் பூர்த்தியாக உள்ள எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரக் காலத்தில் தமது நிலைப்பாட்டை அறிவித்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

முன்கூட்டியே அறிவித்தால் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட
பிரச்சாரங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு என்ற காரணத்தினால் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் அண்மிக்கும் காலத்தில் அவர் நாடு திரும்ப உள்ளார்.

இதேவேளை,  ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி விரைவில் கட்சி தீர்மானம் எடுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சிங்கள ஊடகத்திற்கு அறிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் 353,595 வாக்குகளையும், 2012ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 200,044 வாக்குகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக