புதன், 5 நவம்பர், 2014

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் அதிபர் பணிமனை திறப்பு..!!(படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் அதிபர் பணிமனை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் மாணவர்களின் நன்மை கருதி, கடந்த வருடம் அங்கு புதிதாக இராமகிருஸ்ண வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வித்தியாலயத்தில் பௌதீக வளக்குறைபாடுகள் காணப்படும் நிலையில், கிராம மக்கள், அதிபர் ஆகியோரின் முயற்சியினால் மெல்ல புதிய வளங்களை பெறப்படுகின்றது.

இந்த நிலையில், வடமாகாண சபையின் சிறு திட்ட நிதியினூடாக வலயக் கல்விப் பணிமனையின் மேற்பார்வையின் கீழ், பெற்றோர்களின் பங்களிப்புடன் கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் பாடசாலைக்கான அதிபர் பணிமனை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு பள்ளியின் அதிபர் திருமதி.சூரியகுமாரி இராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது.


முதன்மை விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல் கலந்து கொள்ள, கரைச்சி கோட்ட கல்வி அதிகாரி அமிர்தலிங்கம், கிளிநொச்சியின் பாடசாலைகளான இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை, அன்னை சாரதா வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம், செல்வாநகர் அ.த.க.பாடசாலை, விவேகானந்தா வித்தியாலயம் உள்ளிட்ட பள்ளிகளின் முதல்வர்கள், பிரதி முதல்வர்கள், ஓய்வுபெற்ற முன்னாள் பள்ளி முதல்வர் இராசேந்திரம், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

புதிய அதிபர் பணிமனையை கிளி இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை அதிபர் சின்னத்தம்பி திரவியம் திறந்து வைத்தார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக