இலங்கையில் பௌத்த பிக்குகள் அரசியலை தீர்மானிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் இந்தக்கோரிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.
இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களை காப்பாற்றவே போரிடுவதாக கூறி
போரை முன்னெடுத்தது. எனினும் இறுதியில் அந்த மக்களுக்கு பாரிய துன்பங்களை அந்த அரசாங்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இன்றும் தமிழர்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன. மதத்தலங்கள் அழிக்கப்படுகின்றன. பௌத்த மதத்தலங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பௌத்த மதத்தலைவர்களே தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார்கள். ஜனாதிபதி தேர்தல் அல்லது ஏனைய தேர்தல்களில் அவர்களே முதன்மையை பெறுகின்றனர்.
ஏனைய மதங்களின் குருமார்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டால், அது இலங்கையில் மதப்பிரச்சினையை ஏற்படுத்திவிடக்கூடும்.
எனவே பௌத்த பிக்குகளின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வினோநோகராதலிங்கம் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக