பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் தென் ஆபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோசா இடையில் சந்திப்பொன்று நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் இறுதியாகி வரும் சந்தர்ப்பத்தில் அமைச்சர், இந்த சந்திப்புக்காகவே திடீரென வெளிநாடு சென்றதாக நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பசில் ராஜபக்ச அவசரமாக வெளிநாடு சென்றமை தொடர்பில் அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டு வருவதுடன் குடும்ப பிரச்சினையாக அவர் வெளிநாடு சென்றிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
எனினும், குடும்ப தகராறு காரணமாக அவர் வெளிநாடு செல்லவில்லை
எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைக்கு அமையவே அவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளில் குறிப்பிடத்தக்களவு வாக்கு வீதத்தை ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு கிடைக்க செய்ய தேவையான வழிமுறைகளை உருவாக்குவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் எனக் கூறப்படுகிறது.
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்வுகாண தென் ஆபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் சிறில் ரமபோசா அண்மையில் இலங்கைக்கு வந்து சென்றார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜூமாவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமைய ரமபோசாவின் விஜயம் அமைந்தது.
அதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனுடன் தென் ஆபிரிக்க உப ஜனாதிபதிக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக அறிய கிடைத்துள்ளது.
ஈழ யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தென் ஆபிரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான ஆதரவை வழங்கியது.
அந்நாட்டின் இந்த கொள்கை ரீதியான ஆதரவின் பின்னணியில் இருந்தவர், அப்போது ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிறில் ரமபோசா என அரசியல் துறையில் பேசப்பட்டது.
இதனடிப்படையிலேயே ராஜபக்ஷவினர், வடக்கு வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை கவர ரமபோசாவின் உதவியை நாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக