
இது தொடர்பாக தெரியவருவதாவது,
அநுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளுக்கென தனியான சிறைப்பிரிவு உண்டு. இங்கேயே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள் சிறைவைக்கப்பட்டுனர்.
ஆனால் இதற்கு மாறாக குறிப்பிட்ட அரசியல் கைதிகளை ஏனைய போதைப்பொருள் கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றங்களோடு தொடர்புடைய கைதிகளோடு தடுத்து வைத்துள்ளனர்.
அவர்கள் உடல் உள ரீதியாக சித்திரவதைகளை சந்தித்துவரும் நிலையில் இதுதொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரை சந்திக்க அரசியல் கைதிகள் கோரியபோதும் அது கவனத்தில் எடுக்கப்படாத நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குறித்த அரசியல் கைதிகள் ஈடுபட்டு வருவதாகவும் தற்போது அவர்கள் மயக்க நிலையை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக