வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் பா.உ சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், நவ சமசமாஜக் கட்சித்
தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண சபையின் அவைத்தலைவர் சிவஜானம், வட மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்தி சசிதரன்,ரவிகரன்,தியாகராசா,இந்திரராசா,சிவமோகன், மற்றும்
புளொட் முக்கியஸ்தர் கந்தையா சிவநேசன்(பவான்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி கட்சியின் 34வது தேசிய மாநாடு நேற்றைய தினம் யாழ். இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்றிருந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் 14 எடுக்கப்பட்டிருந்தன.
அவற்றை அறிவிப்பதற்கும், மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்குமான 2ம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன.

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக