தனியார் பஸ்கள் தொடர்பான முறைப்பாடுகளை செய்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் மற்றும் ஸ்கைப் வசதிகளை தனியார் போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. 0716550000 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு தனியார் பஸ்களின் முறைகேடுகள் குற்றச் சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். இதேபோன்று பிரைவேட் (private transport services) என்ற ஸ்கைப் விலாசத்திற்கு அல்லது (mprivatetransport@gmail.com) என்ற ஈமெயில் ஊடாகவும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியுமென அமைச்சு அறிவிக்கிறது.
பயணிகளினால் செய்யப்படும் முறைப்பாடுகளின் போதுமான தகவல்கள் இல்லாத காரணத்தினால் அவை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு முடியாமல் உள்ளது. எனவே, முறைப்பாடுகள் செய்யும் போது வாகனத்தின் இலக்கம், வழி இலக்கம், நேரம் போன்றவை தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.
பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற அனுமதிச்சீட்டை கவனமாக வைத்திருக்க வேண்டும்.
விசாரணைகளை நடத்துவதற்கு இது ஏதுவாக அமையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக