இலங்கையின் ஊடக சுதந்திரம் சம்பந்தமாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்காக அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த பயிற்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் மூலம் இரத்து செய்தமை குறித்து அதிருப்தி தெரிவித்து தூதரகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதன் மூலம் இலங்கையின் ஊடகவியலாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
எவ்வாறாயினும் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, அமெரிக்க தூதரகம் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு எந்த நோக்கத்தில் உதவுகிறது என்பது தெளிவில்லை என குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக