செவ்வாய், 22 ஜூலை, 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டார்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.
கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்க மாட்டார் என
ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கிளாஸ்கோ விஜயம் செய்தால் எதிர்ப்பு போராட்;டங்கள் நடத்தப்படக் கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளாஸ்கோ விஜயத்தை ரத்து செய்யவில்லை என மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தவிசாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ம் ஆண்டிலும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதியினால் ஆற்றப்படவிருந்த விசேட விரிவுரை எதிர்ப்பு காரணமாக இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சியே இந்த விஜயம் கைவிடப்பட்டதான குற்றச்சாட்டை மொஹான் சமரநாயக்க மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக