ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாது என்பதால் இலங்கை அது குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார். கொழும்புக்கு வந்திருந்த அவர் இலங்கை அரசுக்கே இத்தகைய ஆறுதல் அளிக்கும்
அறிவுரையை வழங்கியிருக்கின்றார்.
விவசாய தோட்டங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் 'வெருளிகள்' என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை வர்ணித்துள்ள அவர் ஏன் இலங்கை அவர்கள் குறித்து அக்கறை கொள்ளவேண்டும், அவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்குச் சென்றால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த விடயம் குறித்த கவலையடையத் தேவையில்லை, நாங்கள் (இந்தியர்) ஒரு போதும் சர்வதேச விசாரணையை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக