வியாழன், 17 ஜூலை, 2014

கிளிநொச்சியில் வாகன விபத்து! கரைச்சி பிரதேச தவிசாளர் மயிரிழையில் உயிர்தப்பினார்!! (படங்கள் இணைப்பு)



கிளிநொச்சியில் இன்று (17.07) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கரைச்சி பிரதேச தவிசாளர் குகராசா மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் உட்பட பிரதேசசபையின் பணியாளர்கள் பயணம் செய்த வாகனம் இன்று மாலை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மையில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.

இவ்விபத்தில் கரைச்சி பிரதேசசபை தவிசாளர் குகராசா உட்பட பிரதேசசபையின் பணியாளர்கள் சிலர் சிறுசிறு காயங்களுக்கு உள்ளாகி
மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல் பணிமனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக