வியாழன், 26 ஜூன், 2014

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள பௌத்தர்களினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் பசீர் சேகுதாவுத்....!!!!1

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள பௌத்தர்களனால் மட்டுமே உரிய தீர்வினை வழங்க முடியும் என அமைச்சர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.
கண்டி மடவல கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்களை நிதானமான ஓர் தலைமை வழிநடத்த வேண்டும்.  ஆவேச உணர்வுடன் முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவது பிழையானதாகும்.

கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிங்கள பௌத்தர்களே முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றியிருந்தனர்.

அரசாங்கத்தின் ஊடாகவே முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும்.

பௌத்த மக்களின் ஒத்துழைப்பின்றி தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுக்க தமிழ்த் தலைமைகள் முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.


ஒல்லாந்தர்கள் முஸ்லிம்களை தாக்கிய போது சிங்கள பௌத்தர்களே முஸ்லிம்களை காப்பாற்றியிருந்தனர்.

புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டிய போதும் சிங்கள பௌத்தர்களே அடைக்கலம் வழங்கியிருந்தனர்.

பொதுபல சேனா, ராவணா பலய போன்ற சிறிய பௌத்த அமைப்புக்களினால் முஸ்லிம் சமூகத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தப்படுகின்றது.

எனினும், இதனை தீர்க்க சிங்கள பௌத்தர்களின் ஒத்துழைப்பு அவசியமானது.

பௌத்த மதம் வன்முறைகளை போதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக