
நெதர்லாந்தின் பேர்னிச்சர் பிரதேசத்தில் உள்ள கடலோரப் பகுதியிலிருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் நேற்று முன்தினம் அந்நாட்டு துறைமுகப் பொலீசாரினால் மீட்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் ஓபட் பெர்ஜர்லாந்து பிரதேசத்தில் வசித்துவந்த குறித்த இலங்கையர் கடந்த ஒருவார காலமாக காணாமற் போயிருந்தார். இந்நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலீசார் தெரிவித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக