
மட்டக்களப்பு கரடியனாற்றில் இன்று காலை 11:30 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது. பாதை அமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டுக் கம்பனியொன்றுக்குச் சொந்தமான வெடிபொருள் களஞ்சியத்திலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 52 பேர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக